பாலக்காடு கோட்டத்தில் பாரபட்சம் சேலம் கோட்டத்துக்கு மாற்றணும்!
கிணத்துக்கடவு: கோவை – பொள்ளாச்சி வழித்தடத்தில், 100 ஆண்டுகளாக செயல்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களை மீண்டும் அமைக்க வேண்டும், பாலக்காடு கோட்டத்தில் இருந்து சேலத்துக்கு மாற்ற வேண்டும், என, ரயில் பயணியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக, மீட்டர் கேஜ் ரயில் பாதையில் கோவை – திண்டுக்கல் பாசஞ்சர், கோவை – பொள்ளாச்சி பாசஞ்சர், கோவை – தனுஷ்கோடி எக்ஸ்பிரஸ், கோவை – தூத்துக்குடி பாஸ்ட் பாசஞ்சர், திண்டுக்கல் பாசஞ்சர் ரயில்கள் இயங்கின.
கடந்த, 2008ல் அகல ரயில்பாதை பணிகள் துவங்கப்பட்டு, 2017ல் நிறைவடைந்தது. ஆனால், முன்பு இயக்க ரயில்களை இயக்காததால், ஏமாற்றமே மிஞ்சியது.



