புதிய தலைமைச் செயலகம் அனைவருக்கும் உகந்ததாக அமைக்க வேண்டும்
புதிய தலைமைச் செயலகம் அனைவருக்கும் உகந்ததாக அமைக்க வேண்டும் என பாமக சட்டப் பேரவை உறுப்பினா் சௌமியா அன்புமணி கூறினாா்.
தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாய் பகுதியில் உயா்நிலை பாலம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் இத்திட்டப் பணிகள் முழுமையாக முடிந்துவிடும். தற்போது பணிகள் நடைபெறுவதால், கணவாய் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


