வடமதுரை அருகே போலி டாக்டர் கைது
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கொம்பேறிபட்டியில் போலி டாக்டர் அந்தோணிதாஸ் 68, கைது செய்யப்பட்டார்.
மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பாரதி தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள் நேற்று வடமதுரை பகுதி களில் ஆய்வில் ஈடு பட்டனர்.
கொம்பேறிபட்டி தனியார் மருத்துவமனையில் நடந்த ஆய்வில் முறையாக மருத்தும் படிக்காமல் அந்தோணிதாஸ், நோயாளிகளுக்கு ஆங்கில முறை சிகிச்சை அளிப்பது தெரிந்தது. அங்கு காலாவதியான கருக்கலைப்பு, ஆங்கில மாத்திரைகள் இருந்தது கண்டறியப்பட்டது.


