டிரைவருக்கு கொலை மிரட்டல் இரண்டு வாலிபருக்கு காப்பு
குளித்தலை:குளித்தலையில், தனியார் பஸ் டிரைவரிடம் பைக்கில் அட்ராசிட்டி செய்து, கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை அடுத்த பரளி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம், 47. அம்மையப்பா என்ற நிறுவனத்தில் தனியார் பஸ் டிரைவராக பணிபுரிகிறார். இவர் கடந்த, 12ம் தேதி மணப்பாறை பஸ் ஸ்டாண்டில் இருந்து இரவு, 7:15 மணிக்கு பஸ்சில் புறப்பட்டார். கண்டக்டராக செல்வராஜ் இருந்தார். தோகைமலை, அய்யர்மலை வழியாக குளித்தலைக்கு, 8:15 மணிக்கு வர வேண்டும்.சத்தியமங்கலம் வட்டார போக்குவரத்து பகுதி ஆய்வாளர் அலுவலகம் அருகே வந்த போது, பைக்கில் வந்த மூன்று பேர், பஸ் டிரைவரை தகாத வார்த்தைகளால் பேசி, பஸ்சுக்கு முன்னால் பைக்கை குறுக்கே நிறுத்தி, தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து டிரைவர் அமிர்தலிங்கம் கொடுத்த புகாரின்படி, பைக்கில் வந்த வை.புதுார் நிதிஷ், 19, தெற்கு மயிலாடி தினேஷ், 20, ஆகியோரை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.