நடந்து சென்ற பெண்ணிடம் தாலி பறிப்பு முகமூடி கொள்ளையர் துணிகரம்
நல்லம்பள்ளி; நல்லம்பள்ளி அருகே, நடந்து சென்ற பெண்-ணிடம், முகமூடி கும்பல் தாலி செயினை பறிக்கும் 'சிசிடிவி' காட்சி, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தர்மபுரி மாவட்டம், சேசம்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பூங்கோதை, 42. இவ-ருக்கு இரு மகள்கள் உள்ளனர். தம்பதியர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண-மாக, பூங்கோதை சேசம்பட்டியில் உள்ள தாய் வீட்டில் வசிக்கிறார். கடந்த, 2-ம் தேதி இரவு, 9:30 மணிக்கு பணி முடிந்து, சேசம்பட்டி பஸ் ஸ்டாப்பில் இருந்து வீட்டிற்கு தனியாக நடந்து சென்றார். அப்போது, அவருக்கு பின்னால் முக-மூடி அணிந்து பைக்கில் வந்த இருவர், பூங்கோ-தையை துரத்தி சென்று அவரது கழுத்தில் அணிந்திருந்த, ஐந்தரை பவுன் தாலி செயினை பறிக்க முயன்றனர். பூங்கோதை தாலி செயினை கையில் இறுக பிடித்துக் கொண்டு போராடியதால், 75 சதவீத தாலிசெயின் அவரது கையில் துண்டாகி சிக்கிக் கொண்டது. மீதமிருந்த, 25 சதவீத செயினை முக-மூடி கும்பல் பறித்து கொண்டு, பூங்கோதையை தள்ளிவிட்டு தப்பி
சென்றனர்.