ரயில் மோதி இருவர் பலி
தாம்பரம்:வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிப்பட்டு இருவர் பலியாகினர். தாம்பரம் அருகே இரும்புலியூர்
தாம்பரம்:வெவ்வேறு இடங்களில் ரயிலில் அடிப்பட்டு இருவர் பலியாகினர்.
தாம்பரம் அருகே இரும்புலியூர் பகுதியில் காலை, 35 வயதுள்ள வடமாநில இளைஞர் ரயில் தண்டவாளத்தை கடந்தார். அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதேபோல், தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் தண்டவாளத்தில், 65 வயதுள்ள முதியவர் ரயில் மோதி இறந்து கிடந்தார்.

