வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சீரமைப்பு
காஞ்சிபுரம், செப். 9– வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டு, தடுப்பு ஏற்படுத்தி
வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டு, தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரம் – தாம்பரம் சாலையில், வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், சார் நிலை கருவூல அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், அரசினர் மகளிர் விடுதி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களுக்கு, தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்வோரின் வசதிக்கு ஏற்ப சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்துள்ளனர்.

