ஆசிரியா்கள் கவன ஈா்ப்பு போராட்டம்
ஆலங்குளம் அருகே 3 மாதங்களாக ஊதியம் வராததால் ஆசிரியா்கள் கவன ஈா்ப்புப் போராட்டம் நடத்தினா்.
கவன ஈா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நல்லூரில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியை சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டல நிா்வாகம் நிா்வகித்து வருகிறது. இந்தப் பள்ளியில் 44 ஆசிரியா்கள் மற்றும் 4 அலுவலக உதவியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.


