13.9.1976: பள்ளிகளில் விளையாட்டு கட்டாய பாடமாகும் - மத்ய மந்திரி அறிவிப்பு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
ரெய்ப்பூர், செப். 12 - எல்லா பள்ளிகளிலும் விளையாட்டு கட்டாய பாடமாக்கப்படும் என்று மத்திய கல்வி இலாகா உதவி மந்திரி அரவிந்த் நேதம் அறிவித்துள்ளார்.
மத்யப் பிரதேசத்தில், ஹையர் செகண்டரி பள்ளிகளின் டிவிஷனல் விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு கூறினார்.
