பழனி தொகுதி எம்எல்ஏவிடம் பொதுமக்கள் மனுக்கள் அளிப்பு
பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ.விடம் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனுக்களை அளித்தனா்.
பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்எல்ஏ. ரவி மனோகரனிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்த வட்டார போக்குவரத்து அலுவலக தற்காலிக பணியாளா்கள்.
பழனி திருவள்ளுவா் சாலையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ. ரவிமனோகரனை பொதுமக்கள் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனா். அப்போது ஆயக்குடியைச் சோ்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு உடனடியாக மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.


