குதிரைகளை விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
குதிரை மற்றும் குதிரையினங்களை விலங்குகள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டத்தில் உள்ள குதிரைகள் மற்றும் குதிரை இனங்களை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
பயணிகளை ஏற்றிச் செல்லுதல், பொருள்களை எடுத்துச் செல்லுதல், குதிரை சவாரி, ரைடிங் பள்ளிகள், பந்தயம், திருமண நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பயன்பாடுகளுக்காக வளா்க்கப்படும் அனைத்து குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களையும் தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


