ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் தர்ப்பணம் கொடுக்க தடை இல்லை
மதுரை: 'திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் தர்ப்பணம் கொடுப்பதை தடுக்கும் எண்ணம் இல்லை' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
ஸ்ரீரங்கம் புரோகிதர்கள் சங்க தலைவர் ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது, முன்னோருக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்கு புகழ்பெற்ற இடம். ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம், மண்டபத்திற்குள் கற்களை நட்டு வைத்துள்ளது.


