கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து - பாகிஸ்தான் நாளை மோதல்
லண்டன்,இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண
இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து 194 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.










