17 குட்டிகளை ஈன்ற சிப்பிப்பாறை நாய்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டில் பராமரிக்கப்படும் சிப்பிப்பாறை நாய் ஒன்று ஒரே நாளில் 17 குட்டிகளை ஈன்றது.
திண்டுக்கல் - நத்தம் ரோடு அபிராமி நகர் அரசு ஒப்பந்ததாரர் சந்திரசேகர். இவர் கடந்த 5 ஆண்டுகளாக சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த 'பொம்மி' என்ற நாயை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இந்த நாயானது 10 பெண் குட்டிகள், நேற்று காலை 7 ஆண் குட்டிகள் என ஒரே நாளில் 17 குட்டிகளை ஈன்றது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். இவரது நாய் தனது ஒன்றே கால் வயதில் ஒரே நாளில் 10 குட்டிகளை ஈன்றது குறிப்பிடத்தக்கது.

