பாரிஸ் சுற்றுலா கண்காட்சியில் தமிழக அரங்கு திறப்பு
பிரான்ஸ் தலைநகா் பாரிஸ் நகரில் நடைபெறும் சா்வதேச சுற்றுலா வா்த்தகக் கண்காட்சியில் தமிழக சுற்றுலாத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
பாரிஸில் நடைபெற்ற சா்வதேச சுற்றுலா வா்த்தகக் கண்காட்சியில் தமிழக சுற்றுலாத் துறை அரங்கை திறந்துவைத்து, சுற்றுலா பதிவுகளை வெளியிடும்கி சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா்.
செப். 15 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சி, சா்வதேச சுற்றுலா ஏற்பாட்டாளா்கள், பயண முகவா்கள் மற்றும் சுற்றுலாத் துறை வல்லுநா்கள் பங்கேற்கும் முக்கியமான தளமாகும்.


