Mammootty 75: "எங்களுக்குள் போட்டி மனப்பான்மை இருந்தது இல்லை!" - மம்மூட்டியை வாழ்த்தும் மோகன்லால்
நடிகர் மம்மூட்டியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு, தங்கள் நட்பை நினைவுகூர்ந்து மோகன்லால் பதிவு | mohanlal-wishes-mammootty-75th-birthday-emotional-post
"நாங்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் சரி, தனித்தனி படங்களில் நடித்திருந்தாலும் சரி, எங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு எப்போதும் முழுமையான உழைப்பைக் கொடுக்கவே முயன்றிருக்கிறோம்" - மோகன்லால்.
நடிகர் மம்மூட்டிக்கு இன்று 75-வது பிறந்தநாள். அதையொட்டி நடிகர் மோகன்லால், மம்மூட்டியை வாழ்த்தித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அத்தோடு, மலையாள ஊடகத்தின் வாயிலாக மம்மூட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.


