ஆயுதங்கள் திருடப்பட்ட வழக்கு முன்னாள் ராணுவ அதிகாரி கைது
ஹைதராபாத்: தெலுங்கானாவில், ராணுவ முகாமில் ஆயுதங்கள் திருடப்பட்ட வழக்கில், முன்னாள் ராணுவ அதிகாரி உப்புதல்லா மல்லேஷை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானாவின் செகந்திரபாத் அருகே உள்ள போல்லாராம் பகுதியில், ராணுவத்தின் மெட்ராஜ் ரெஜிமென்டின், 20வது பட்டாலியன் இயங்கி வருகிறது. இங்கு, கடந்த 31ல், ஆயுதக் கிடக்கில் இருந்த துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை திருடப்பட்டன.
இது குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில், அந்த முகாமில் சமீபத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ராணுவ ஹவில்தாராக பணியாற்றிய உப்புதல்லா மல்லேஷ் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. விசாரித்ததில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

