போக்சோவில் தொழிலாளர் கைது
கிணத்துக்கடவு: நெகமம் அருகே, தென்னை நார் தொழிற்சாலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர், மனைவி மற்றும் 15 வயது மகளுடன் தங்கி வேலை செய்கிறார். கடந்த, 7ம் தேதி காலை, மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு வேலை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜெயராஜ்குமார், 40, என்பவரும் காணவில்லை. இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிறுமியும், ஜெயராஜ்குமாரும் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்தது தெரியவந்தது. சிறுமியை மீட்ட போலீசார், ஜெயராஜ்குமாரை போக்சோ பிரிவில் கைது செய்தனர்.
விசாரணையில், ஜெயராஜ்குமார் தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்து, சிறுமிடம் திருமணம் ஆசை காட்டி திருப்பூருக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.


