'அமெரிக்கா-இந்திய உறவைப் பார்த்து பிறருக்கு பொறாமை'.. அமெரிக்கா-இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து - அமெரிக்கத் தூதர்
அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். இந்தியாவில்
அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் நிலைத்தன்மையை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளதாகவும், அதனால் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா-இந்தியா இடையே பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தூதரக உறவுகள் மேம்பட்டுள்ளதாகவும், இது மற்ற நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு இருப்பதாகவும் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.

