கீழக்கரை சித்த மருத்துவப் பிரிவில் டாக்டர் இல்லை பூட்டியே வைக்கப்பட்டுள்ளது
கீழக்கரை: கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் டாக்டர் இல்லாததால் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக சித்த மருத்துவப் பிரிவு கட்டடம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் காலை முதல் மாலை வரை மருந்து வாங்கவும், பரிசோதனைக்கு வரும் புறநோயாளிகள் பாதிப்படைகின்றனர். சிக்கல் பகுதி சி.ஐ.டி.யூ., மாவட்ட துணைச் செயலாளர் போஸ் கூறியதாவது:
சித்த மருத்துவ பிரிவிற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் மருந்து மாத்திரைகள் வாங்க வருகின்றனர். நோயின் தன்மைக்கு ஏற்ப உடல் பரிசோதனை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை பூட்டியே வைக்கப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
