சகோதரர்களை வெட்டிய வழக்கில் தந்தை, மகனுக்கு 3 ஆண்டு சிறை
சங்ககிரி; சேலம் மாவட்டம் இடைப்பாடி, செட்டிப்பட்டி அருகே கப்பரையான்காடை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம், 58. இவரது உறவினர் கருப்-பண்ணன், 63. இந்த இரு குடும்பத்தினர் இடையே நிலத்தகராறு ஏற்பட்டு வந்தது. 2018 ஏப்., 15ல் கருப்பண்ணன், அவரது மகன் லட்சுமணன், 41, லட்சுமணன் மனைவி சாந்தி, 31, ஆகியோர், மண் வெட்டி அள்ளி கொண்டிருந்தபோது, வெங்கடா-சலம், அவரது மனைவி செல்லம்மாள் ஆகியோர், 'அளவீடு செய்யாத காட்டில் ஏன் மண் அள்ளுகி-றீர்கள்' என கேட்டனர். அதில் அவர்களுக்குள் தக-ராறு ஏற்பட்டது.
இதில் கருப்பண்ணன், லட்சுமணன், சாந்தி ஆகியோர், வெங்கடாசலத்தை தாக்கி அரி-வாளால் வெட்டினர். சத்தம் கேட்டு அங்கு வந்த, அவரது சகோதரர் கந்தசாமியையும் வெட்டினர். இதில் காயம் அடைந்த சகோதரர்கள், சீரகாபா-டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.தேவூர் போலீசார், கருப்பண்ணன், லட்சுமணன், சாந்தி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவு-களில் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு சங்ககிரி உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் சாந்தியை விடுவித்து, கருப்பண்ணன், லட்சுமண-னுக்கு தலா, 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி பன்னீர்-செல்வம் நேற்று தீர்ப்பளித்தார்.


