காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
வடமதுரை:வேடசந்துார் ஜி.நடுப்பட்டியை சேர்ந்த ஜீவிகா 22, ராகுல் 22, இடையே காதல் ஏற்பட்டது. இருவரது காதல் விவகாரம் தெரியவர பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்க்க துவக்கினர்.
இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்தனர். பின்னர் பாதுகாப்பு கோரி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் பேச்சுவார்த்தையில் பெண் வீட்டினர் ஏற்க மறுத்தனர். இருவரும் மேஜர் என்பதால் எந்தவித இடையூறும் செய்யக் கூடாது என அறிவுறுத்தி, மணமகன் வீட்டினருடன் அனுப்பி வைத்தனர்.