தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளர்கள்... யாருடைய சொத்து மதிப்பு அதிகம்?
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமா ஒட்டுமொத்தமாக 16 கோடியே 40 லட்ச ரூபாய் சொத்துக்களுடன் முதலிடத்தில் தொடர்கிறார்.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. அதில், ஆளும் தவெக சார்பில் களமிறங்கியுள்ள சத்தியபாமா, 1 கோடியே 71 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்பட 16 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிடும் பானுமதி, ஆயிரத்து 300 கிராம் தங்கம், எஸ்யூவி கார், 2 கோடியே 7 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்து உள்பட 5 கோடியே 96 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகள் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகன்யா, 550 கிராம் தங்கம், 41 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்பட 44 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கொண்டுள்ளார்.


