13 போலீசாருக்கு அண்ணா பதக்கம்
கோவை: தமிழகம் முழுவதும் 138 போலீசார் அண்ணா பதக்கத்துக்கு தேர்வாகியுள்ளனர்.
கோவையில், மாநகர் தெற்கு துணை கமிஷனர் கார்த்திகேயன், உளப்பிரிவு உதவி கமிஷனர் பார்த்திபன், ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் இளங்கோவன், எஸ்.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், உளவுப்பிரிவு எஸ்.ஐ.,கணேசன், ரத்தினபுரி எஸ்.ஐ., ராஜ்குமார், சரவணம்பட்டி எஸ்.எஸ்.ஐ., மணி, குனியமுத்தூர் எஸ்.எஸ்.ஐ., பரமகுரு பாண்டி, காட்டூர் எஸ்.எஸ்.ஐ., கிரிசாமி, போலீஸ் பயிற்சி எஸ்.எஸ்.ஐ., கோமதி, கிரைம் ரெக்கார்டு பீரோ எஸ்.எஸ்.ஐ., ராஜசேகரன், கடைவீதி ஏட்டு ஜெயக்குமாரி, தீவிரவாத தடுப்பு பிரிவு ஏட்டு விமல் குமார் ஆகிய, 13 போலீசார் அண்ணா பதக்கம், பரிசு தொகைக்கு தேர்வாகியுள்ளனர்.

