16 போட்டிகள்... ஒரு தோல்வி கூட இல்லை - கேப்டனாக அசத்தும் இஷான் கிஷன்
சென்னை,16 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வி கூட இல்லாமல் கேப்டனாக இஷான் கிஷன் அசத்தியுள்ளார். தோல்வியற்ற பயணம்துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் க
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணி, தெற்கு மண்டல அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம் ஈஸ்ட் ஜோன் அணி 3-வது முறையாக துலீப் கோப்பையை வென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷன், முதல்தர கிரிக்கெட்டில் கேப்டனாக தனது தோல்வியற்ற சாதனைப் பயணத்தை தொடர்ந்து நீட்டித்துள்ளார்.
முதல்தர கிரிக்கெட்டில் கேப்டனாக இஷான் கிஷன் பங்கேற்ற 16 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்கவில்லை. 2018-ம் ஆண்டு தொடங்கிய அவரது தோல்வியற்ற கேப்டன்சி பயணம் தற்போது 9-வது ஆண்டை எட்டியுள்ளது.


