வெவ்வேறு வடிவங்களில் அருள்பாலிக்கும் விநாயகர் பெருமான்! - எஸ். கமலநாதன்
சென்னை அடையாறிலுள்ள மத்திய கைலாசம் கோவிலில் ஆதியந்த பிரபுவாக விநாயகர் காட்சி தருகிறார். விநாயகர்- அனுமான் சரிபாதியாக அமைந்த திருக்கோலமே இந்த ஆதியந்த பிரபு.
காஞ்சிபுரம், திருவோணக் காந்தன் தளியில் கருவரை மண்டபத்தில் நுழைவு வாயிலில் சுவரின் முகப்பில் விநாயகர் திருவுருவம் ஒன்று இருக்கிறது. அவரது அருகில் சென்று நம் காதை வைத்துக் கேட்டால் ஒருவகை ஓங்கார ஒலி ஒலிக்குமாம். இதைப் பல்லாண்டு காலமாக பல்லாயிரம் மக்கள் கேட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றத்திலுள்ள விநாயகர் கற்பக விநாயகர். தாமரைப் பூவில் அமர்ந்திருப்பார். இவரது கையில் முழுக்கரும்பு இருக்கும். அடிக்கரும்பு ஒரு கையிலும், நுனிக்கரும்பு மற்றொரு கையிலும் இருக்கும். இந்த விநாயகருக்கு கீழே மிகவும் சிறிய ஆஞ்சனேயர் சிலை உள்ளது தனிச்சிறப்பு.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


