ராமாபுரம் அரசு பள்ளி மாணவன் தேசிய பாரா தடகள போட்டிக்கு தேர்வு
நடுவீரப்பட்டு:ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் மாநில அளவிலான பாரா தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
மாநில அளவிலான பாரா தடகள போட்டி மதுரையில் நடந்தது. அதில், கடலூர் அடுத்த ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் தமிழ்பாரதி, 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்து தங்கம் வென்று, தேசிய போட்டிக்கு தேர்வானார்.
தேசிய போட்டிக்கு தேர்வான மாணவர், தமிழ்பாரதியை பள்ளி தலைமைஆசிரியர் எல்லப்பன்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமமூர்த்தி, உடற்கல்வி ஆசிரியர் விக்ரமன் உள்ளிட்டோர் பாராட்டினர்.


