கூட்டுறவு வளர்ச்சி நிதிக்கு காசோலை வழங்கல்
கள்ளக்குறிச்சி: குரால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் ஈட்டிய மொத்த லாப தொகையில் 5 சதவீதத்தை கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிக்காக வழங்கப்பட்டது.
சின்னசேலம் அடுத்த குரால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 2017–18 முதல் 2020–21ம் ஆண்டு வரை, 4 நிதியாண்டுகளில் ஈட்டிய மொத்த லாப தொகையில் 5 சதவீதத்தை கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதன்படி, கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு 4 லட்சத்து 7,795 ரூபாய், கூட்டுறவு கல்வி நிதிக்கு 2 லட்சத்து 71 ஆயிரத்து 864 ரூபாய் என மொத்தமாக 6 லட்சத்து 79 ஆயிரத்து 659 ரூபாய்க்கான காசோலையை கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் முருகேசனிடம் வழங்கப்பட்டது.

