திமுக செய்த தவறுகளை சொல்லியே ஆக வேண்டும்; அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்
சென்னை: திமுக செய்த தவறுகள், துரோகங்களை சொல்லி தான் ஆக வேண்டும். தவறுகளை சரி செய்ய நாங்கள் எவ்வளவு போராடி கொண்டு இருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கட்சியுடன் கூட்டணி இருக்கும்; எங்களுடைய ஆட்சி ஆதரவு இருக்கும் என கம்யூனிஸ்ட் கூறியுள்ளது. நாங்கள் மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறோம். திமுக செய்த தவறுகள், துரோகங்களை சொல்லி தான் ஆக வேண்டும். 5 வருடமாக திமுக செய்த தவறுகளை சரி செய்ய நாங்கள் எவ்வளவு போராடி கொண்டு இருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும்.
தமிழகத்தின் நிதி நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு துறையும் எவ்வளவு மோசமாக இருக்கிறது; 3 தலைமுறை 70 வருட கட்சி, அரசியல் இருக்கிறோம் எல்லாம் சரி தான். ஆனால் மக்களுக்கு என்ன செய்தீர்கள். நீங்கள் எதை சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். இன்றைக்கு இருக்கும் தலைமுறைக்கு சொல்லி தான் ஆக வேண்டும். திமுக கச்சத்தீவை தாரை வார்த்தார்கள்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

