பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் பூஜை
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்-கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில், தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். தமிழ் மாத புரட்டாசி போலவே, தெலுங்கு, கன்னட மக்கள் ஸ்ராவன மாதங்களில் அசைவம் சாப்பிடாமல், அம்மாதத்தில் வரும் அனைத்து சனிக்-கிழமைகளிலும் பெருமாள், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கடைசி ஸ்ராவன சனிக்கிழமையான நேற்று, பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சூளகிரி அடுத்த, கோபசந்திரம் தட்-சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிேஷகம் செய்யப்பட்டது.தமிழகம், கர்நாடகா, ஆந்திர மாநில பக்தர்கள், கருட கம்-பத்தின் முன் தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
அதேபோல், கெலமங்கலம் அருகே ஒசபுரம் கிராமத்தில், சீதா சமேத ராமர் கோவிலில், 32 அடி உயரம் கொண்ட, வீர ஆஞ்ச-நேயர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சூளகிரி அருகே பஸ்த-லப்பள்ளி திம்மராய சுவாமி கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


