போச்சம்பள்ளி அருகே திருப்பதிக்கு புறப்பட்டு சென்ற 7 கிராம மக்கள்
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகே, 5 ஆண்டுக்கு பின், 7 கிராம மக்கள் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே கீழ்குப்பம், பாப்பானுார், துறையூர், ஆவல்நாயக்கனப்பட்டி, மோட்டூர் உட்-பட, 7 கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்-கின்றன.விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இக்கிராம மக்களின் பிர-தான தொழிலாக உள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள், குடும்பத்துடனோ அல்லது தனிநபராகவோ, திருமலை திருப்ப-திக்கு செல்வது கிடையாது. இந்த அறிவிக்கப்படாத கிராம கட்-டுப்பாடு இன்று வரை தொடர்கிறது.
சுவாமி அருள் வந்து கூறினால் தான், கிராம மக்கள் ஒன்றாக திருப்பதி செல்வர். கடந்த, 5 ஆண்டுக்கு முன் கிராம மக்கள் திருப்பதி சென்றனர். சமீபத்தில் பெண் ஒருவருக்கு அருள் வந்து திருப்பதி வருமாறு கூறியதால், நேற்று முன்தினம் இரவு, கீழ்-குப்பம் ஊராட்சியில் உள்ள, 7 கிராமத்தை மக்கள், 7 பஸ்கள் மற்றும் கார்கள் மூலம், 700க்கும் மேற்பட்டோர் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர்.
