`கணினிப் படிப்புக்கு இங்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை'- ஆசிரியர்கள் குமுறலும் அமைச்சர் விளக்கமும்!
தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக மத்திய அரசானது கணினி அறிவியல் பாடத்திற்கு நிதி ஒதுக்கியும், தமிழக அரசு அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள்.
”தமிழ்நாட்டில் மட்டும்தான் கணினி அறிவியல் பாடமானது ஒதுக்கப்பட்ட பாடமாக இருக்கிறது” என கொந்தளிக்கிறார்கள் கணினி பட்டதாரி ஆசிரியர்கள். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக மத்திய அரசானது கணினி அறிவியல் பாடத்திற்கு நிதி ஒதுக்கியும், தமிழக அரசு அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள்.
இது தொடர்பாக கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநிலத் தலைவர் குமரேசனிடம் பேசினோம்:


