15.9.1976: யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது: கோவில்பட்டியில் பிரதமர் இந்திரா காந்தி உறுதிமொழி
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
கோவில்பட்டி: எந்த மொழியும் யார் மீதும் கட்டாயமாக திணிக்கப்பட மாட்டாது என்று தமிழ் நாட்டு மக்களுக்கு பிரதம மந்திரி இந்திரா காந்தி உறுதி கூறினார்.
வறட்சி நிவாரணப் பணிகளை பார்வையிட்ட பின்னர் அவர் இங்கு கூட்டமொன்றில் பேசினார். பிராந்திய மொழிகளை சகல விதத்திலும் ஊக்குலிப்பதே மத்திய சர்க்காரின் கொள்கை என்று பிரதம மந்திரி குறிப்பிட்டார்.

