தேசிய வன தியாகிகள் தினம் அனுசரிப்பு
தர்மபுரி; தேசிய வனத் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட வன அலுவலகத்தில், வனத் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனச்சரகம், சின்னாறு பீட்டில் வனக்காப்பாளராக பணிபுரிந்த அப்பன்பு மற்றும் பென்னாகரம் பீட்டில் வனக்காப்-பாளராக பணிபுரிந்த பழனி ஆகியோர், 1999 மே, 3ம் தேதி வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளி-களால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்-யப்பட்டனர்.
பின்னர் அவர்களது உடல் வனப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. இந்த நிலையில், தர்மபுரி மாவட்ட வன அலுவலகத்தில் வனக்காப்பாளர்களின் துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் உயிர் தியா-கத்தை நினைவுகூர்ந்த மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், தேசிய வனத் தியாகிகள் துாணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்-தினார்.

