அரசு கார் வேண்டாம் தி.மு.க., கடிதம்
சென்னை: அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், அரசு சார்பில் கார் வழங்குவதாக, முதல்வர் விஜய் அறிவித்தார். இதையடுத்து, 'தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக, முதல்வர் விஜய் கூறி வருவதால், தி.மு.க.,வை சேர்ந்த 59 எம்.எல்.ஏ.,க்களும் கார்களை பெற மாட்டோம்' என, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று, தி.மு.க., துணை கொறடா கோவி செழியன், 59, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை, சபாநாயகர் பிரபாகரிடம் நேற்று வழங்கினார்.
அதில், 'எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அறிவித்தபடி, தி.மு.க.,வை சேர்ந்த 59 எம்.எல்.ஏ.,க்களுக்கும் கார் வேண்டாம்' என கூறப்பட்டுள்ளது.






