உங்களுக்காக வேலை செய்யும் AI.. Mark Zuckerberg அறிமுகப்படுத்திய ‘Muse’!
செய்தியாளர் - M. மீரா செயற்கை நுண்ணறிவு துறையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வகையில், Mark Zuckerberg தலைமையிலான Meta புதிய ‘Muse’ தனிப்பட்ட AI ஏஜென்டை அறிமுக
Mark Zuckerberg தலைமையிலான Meta, பயனருக்காக நேரடியாக வேலை செய்யும் தனிப்பட்ட AI ஏஜென்டான ‘Muse’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Muse, மின்னஞ்சல் அனுப்புதல், பயண திட்டமிடல் போன்ற பணிகளை பயனர் சார்பில் செய்து, உரையாடல்களில் இருந்து தகவல்களை நினைவில் வைத்து எதிர்கால பரிந்துரைகள் வழங்கும்.
செயற்கை நுண்ணறிவு துறையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வகையில், Mark Zuckerberg தலைமையிலான Meta புதிய ‘Muse’ தனிப்பட்ட AI ஏஜென்டை அறிமுகப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 8 அன்று அறிவிக்கப்பட்ட Muse, கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் நின்றுவிடாமல், பயனர்களுக்காக நேரடியாக பல்வேறு பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
Muse-க்கு ஒரு பணியை கூறினால், அதை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தானாக மேற்கொள்ள முடியும். உதாரணமாக, மின்னஞ்சல் அனுப்புவது, பயணத்தைத் திட்டமிடுவது உள்ளிட்ட அன்றாட பணிகளை பயனர் சார்பில் செய்ய முடியும். மேலும், பயனரின் உரையாடல்களில் இருந்து முக்கியமான தகவல்களை நினைவில் வைத்துக்கொண்டு, எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப பரிந்துரைகளையும் வழங்கும் என Meta தெரிவித்துள்ளது.

