அமெரிக்காவில் அதிர்ச்சி: இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சுட்டுக்கொலை
வாஷிங்டன்அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஷாலினி (வயது 38). இவர் அ
அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஷாலினி (வயது 38). இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சகிரிமெண்டொ நகரில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தார்.
இதனிடையே, ஷாலினிக்கு 22 வயதான இளைஞர் தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த அந்த இளைஞர் ரோகித் என்பதும் அவர் அரிசோனா மாகாணத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றதும் தெரியவந்துள்ளது.




