மூளைச்சாவு அடைந்த வாலிபர் இதயம்: நோயாளிக்கு பொருத்தி சாதனை
பெரம்பலுார்: மூளைச்சாவு அடைந்த சிவகங்கை வாலிபரின் இதயத்தை புதுச்சேரி நோயாளிக்கு பொருத்தி, சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்தனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த, 23 வயது வாலிபர், சாலை விபத்தில் சிக்கி, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தார். அவரது இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
பெரம்பலுார் மாவட்டம், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த, 43 வயது பயனாளிக்கு, அந்த இதயத்தை பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது.


