மூக்கையாத்தேவரின் பெரும்புகழ் போற்றுவோம்: சீமான்
சென்னை,நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;“தமிழ்நாட்டில் என் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள கட்ச
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
“தமிழ்நாட்டில் என் இராமநாதபுரம் தொகுதியில் உள்ள கட்சத்தீவை எங்கள் அனுமதி இல்லாமல் இலங்கைக்குத் தாரைவார்க்க நீங்கள் யார்? பல்லாயிரம் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பலநூறு மீன்பிடி படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் சனநாயகம் பேசிக் கொண்டு சர்வாதிகாரி போல் நடக்கிறீர்கள்" என்று இந்திராகாந்தி அரசைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் முழங்கியபோது, இடைமறித்த காங்கிரசாரை நோக்கி, 'நீங்கள் எங்களின் துரோகிகள்' என்று அன்றே அடையாளப்படுத்தி வெளிநடப்பு செய்த உறங்காப்புலி..!
களம் கண்ட அனைத்து தேர்தல்களிலும் தொகுதி மாறாது வென்று சரித்திர சாதனை படைத்த ஒப்பற்ற தலைவர்..!



