ஆவின் பால் விற்பனை 10 சதவீதம் குறைப்பு: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு
சென்னை, ஆவின் பால் விற்பனை 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்
ஆவின் பால் விற்பனை 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு ஆவினுக்கான பால் கொள்முதல் விலையை கடந்த வாரம் உயர்த்திய நிலையில், அதற்கேற்ற வகையில் விற்பனை விலையை உயர்த்தாமல் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் திமுக செய்த அதே தவறை தற்போதைய தவெக அரசும் செய்திருப்பதால் ஆவினுக்கான நிதியிழப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. காரணம் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டும் ஆவினுக்கான பால் வரத்து அதிகரிக்காததால் அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினியிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து பால் கொள்முதல் செய்தும், வடமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் வெண்ணெய், பால் பவுடர் கொண்டு பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் நிலை தொடர்வதாலும் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கடுமையான நிதியிழப்பை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் விற்பனையை குறைக்க இணையத்தில் நிர்வாக இயக்குநரும், மாவட்ட ஒன்றியங்களில் பொது மேலாளர்களும் வாய்மொழி உத்தரவுகளை பிறப்பித்து ஆவின் பாலுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, அரசுக்கு அவப்பெயரை உருவாக்கி வருகின்றனர்.
குறிப்பாக குமரி மாவட்டத்தில் ஆவின் நிறை கொழுப்பு பால் (Full Gream Milk) உற்பத்தி மற்றும் விற்பனை கடந்த சில வாரங்களுக்கு முன் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதோடு, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே ஆவின் பால் விநியோகம் பலமடங்கு திட்டமிட்டு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பால் முகவர்கள் பொதுமக்களுக்கு தேவையான பாலினை தொடர்ந்து விநியோகம் செய்ய முடியாமல் திணறி வருவதோடு, குறைந்த வருவாயில் வாழ்க்கையை ஓட்டி வரும் பால் முகவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, பால் விநியோகத்திற்கான வாகன எரிபொருள், பணியாளர்கள் சம்பளம், கடை வாடகை, மின்சார கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.





/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
