பாரதிதாசன் பல்கலை. அளவிலான ஆண்கள் குத்துச்சண்டை போட்டி முடிவுகள்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான ஆண்கள் குத்துச்சண்டை போட்டிகள் புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றன. அதிக வெற்றிகளைப் பெற்று, மணப்பாறை ஆதவன் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.
புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற பல்கலைக்கழக அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் வென்ற மணப்பாறை ஆதவன் கல்லூரி வீரா்களுக்கு கோப்பையை வழங்கிய பல்கலைக்கழக உடற்கல்விச் செயலா் ஏ. பழனிசாமி.
பல்கலைக்கழக ஆளுகைக்குள்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட அணிகள், 70-க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்து கொண்டனா். கற்பகவிநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்.


