கல்வி கடன் சிறப்பு முகாம்
பழநி:பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் வங்கிகள் சார்பில் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் கலெக்டர் துர்கா பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். பின்னர் பழநி அரசு மருத்துவமனையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தில் மோதிரங்களை பாதுகாக்க அமைக்கப்பட்டு வரும் அறையை பார்வையிட்டார்.
துணை இயக்குனர் உமா, வங்கி மேலாளர்கள் தங்கதுரை, பாண்டியன், உதவி செயற் பொறியாளர்கள் சுதா, பிரதாப், பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி முதல்வர் ரவிசங்கர், அரசு தலைமை மருத்துவர் உதயகுமார், தாசில்தார் மங்களபாண்டியன், பி.டி.ஓ., பிரபுபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

