வெப்பத் தணிப்புத் திட்டம்: ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை..!
சென்னை,பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், தலைமையில் நகர்ப்புற வெப்பத் தணிப்புத் திட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின்
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், தலைமையில் நகர்ப்புற வெப்பத் தணிப்புத் திட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP- United Nation Environment Programme) பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (09.09.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இக்கூட்டம் சென்னையில் நகர்ப்புற வெப்பத்தைக் குறைப்பதற்கான கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையாளர் (பணிகள்) செ.சரவணன், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் அமைப்பின் திட்ட மேலாளர் பெஞ்சமின் ஹிக்மேன் (UNEP Programme Manager - Benjamin Hickman), மூத்த ஆலோசகர்கள் ஆர்த்தி நைன் (Aarti Nain), துர்கானந்த் பல்சாவர் (Durganand Balsavar), மணிகண்டன் பரமேஸ்வரன் (Manikandan Parameswaran), ஆரோவில் கன்சல்டிங் அமைப்பின் திட்ட மேலாண்மை குழுவினர் (Project Management Unit from Auroville Consulting Team) மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

