'ஆடையின்றி கவர்ச்சி விளம்பரம்' - சிட்னி ஸ்வீனிக்கு எதிராக ஒன்று கூடும் விளையாட்டு வீராங்கனைகள்!
இரண்டு நாட்களுக்கு முன்பு நோவிக் என்ற பிராண்டுக்காக விளையாட்டு போட்டிகளை மையப்படுத்தி ஆடைகளின்றி நடித்திருந்த ஒரு விளம்பரப் படத்தையும் அதன் ஸ்டில்களையும் சிட்னி ஸ்வீனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகையான சிட்னி ஸ்வீனி 'நோவிக்' என்கிற ஸ்போர்ட்ஸ் சார்ந்த நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் ஆடைகளின்றி விளையாட்டு வீராங்கனை பாத்திரத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். சமூகவலைதளங்களில் இந்த விளம்பரம் வைரலாகவே பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த வீராங்கனைகள், 'விளையாட்டு வீராங்கனைகளை கவர்ச்சிப் பொருளாகத்தான் அடையாளப்படுத்துவீர்களா?' என கொந்தளித்து வருகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நோவிக் என்ற பிராண்டுக்காக விளையாட்டு போட்டிகளை மையப்படுத்தி ஆடைகளின்றி நடித்திருந்த ஒரு விளம்பரப் படத்தையும் அதன் ஸ்டில்களையும் சிட்னி ஸ்வீனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் படங்களுக்கு வழக்கம் போல எக்கச்சக்கமான லைக்ஸூகளும் ஷேர்களும் குவிந்து வைரலானது. அந்த விளம்பரப் படத்தில் விளையாட்டு வீராங்கனையாக சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம்தான் இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.


