வள்ளலாரின் அவதார தின விழா
காஞ்சிபுரம்: வள்ளலார் அவதரித்த 203வது ஆண்டு விழா, காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் சன்னிதி தெருவில் உள்ள ராமலிங்க அடிகள் அருள் நிலையம் சார்பில், வள்ளலார் அவதரித்த 203வது ஆண்டு விழா, நேற்று காலை 6:00 மணிக்கு கொடியேற்றுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அகவற்பாராயணமும், சொற்பொழிவும் நடந்தன
ஆழ்வார் திருநகர் ஞானாசிரியர் பாலு தலைமையில், சங்க முன்னாள் மாநில தலைவர் தயவுநிறை படப்பை பாலகிருஷ்ணன் நடுவராக பங்கேற்ற, வள்ளலார் இப்பூவலகிற்கு வந்ததின் நோக்கம், கல்லாய மனத்தை கரையச் செய்யவா அருள் அறிவு பெற்று வாழ்வாங்கு வாழவா என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடந்தது. சங்க பொருளாளர் பழனி நன்றி கூறினார்.

