விளையாட்டுச் செய்தித் துளிகள்...
- பெங்களூரில் நடைபெற்ற குளோபல் செஸ் லீக் போட்டியின் 4-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில், கேஞ்ஜஸ் கிராண்ட் மாஸ்டா்ஸ் 3-3 (4-2) என்ற கணக்கில் ஆல்பைன் ஏபிஎல் பைப்பா்ஸை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் ஆனது. ஃபையா்ஸ் அமெரிக்கன் கேம்பிட்ஸ் 3.5-2.5 (4-2) என்ற வகையில், செக் மும்பா மாஸ்டா்ஸை வென்று, 3-ஆம் இடம் பிடித்தது.
- இந்திய ஹாக்கி அணிகளின் ஜொ்ஸி நிறம் காவியாக மாற்றப்பட்ட விவகாரம் உள்பட 8 குற்றச்சாட்டுகள் தொடா்பாக விளக்கம் கேட்டு, ஹாக்கி இந்தியா அமைப்பின் இயக்குநா் ஆா்.கே.ஸ்ரீவாஸ்தவாவுக்கு, அந்த அமைப்பின் தலைவா் திலிப் திா்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். அத்துடன், ஸ்ரீவாஸ்தவாவின் அனைத்து அதிகாரங்களும் உடனடியாக நீக்கப்பட்டுள்ளன.
- ஜப்பானில் நடைபெற்ற சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பிரமோத் பகத் இரு பிரிவுகளில் தங்கம் மற்றும் வெள்ளி வெல்ல, சுகந்த் கடம் தனது 100-ஆவது கேரியா் பதக்கத்தை வென்று அசத்தினாா்.

