ஓடையில் முகாமிட்ட யானைகள் விரட்டிய வனத்துறையினர்
அஞ்செட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்சர-கத்தில், 100க்கும் மேற்பட்ட நிரந்தர யானைகள் உள்ளன.
நேற்று காலை வனத்திலிருந்து, 4 குட்டிகளுடன் வெளியேறிய, 15க்கும் மேற்பட்ட யானைகள், உரிகம் வழியாக பட்டர் தொட்டி என்ற பகுதிக்கு சென்றன. அப்பகுதியிலுள்ள ஓடையில் யானைகள், குட்டிகளுடன் ஆனந்த குளியல் போட்டன. இதையறிந்த சுற்றுப்-புற கிராம மக்கள், யானைகளை பார்க்க திரண்டனர். அவர்களை அங்கிருந்து செல்ல வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தியும் மக்கள் கேட்கவில்லை. ஓடையிலிருந்து வெளியேறி, வனத்திற்கு செல்ல, யானைகள் கூட்டம், ஐந்து முறை முயற்சித்தும், மக்கள் சூழ்ந்து நின்றதால், மீண்டும் ஓடைக்குள் சென்று விட்டன. பகல் நேரத்தில் யானைகளை விரட்டினால், அவை தாக்கி, மனித உயிரி-ழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாலை வரை யானைகளை விரட்டாமல் வனத்துறையினர் கண்காணித்தனர்.அதன்பின், உரிகம் வனச்சரகர் தினேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர், பட்டாசு வெடித்து, உரிகம் வனப்பகுதி நோக்கி யானைகளை விரட்டினர்.
