கார் லோன் கட்ட முடியாமல் வாலிபர் தற்கொலை
விக்கிரவாண்டி: கார் கடன் தவணை செலுத்த முடியாமல் மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வடக்குச்சி பாளையத்தை சேர்ந்த அய்யனார் மகன் கலியபெருமாள், 19 ;இவர் வங்கியில் கடன் பெற்று கார் வாங்கி சென்னையில் ஐ.டி., கம்பெனிக்கு மாத வாடகைக்கு ஓட்டி வந்தார்.
போதிய வருமானம் இல்லாததால் கார் கடனுக்கு தவணை கட்ட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

