சீனாவில் விங் சூட் சாம்பியன்ஷிப் போட்டி... வீரர்கள் சாகசம் செய்து அசத்தல்!
மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் மலைச் சிகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையே வீரர்கள் பறந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
சீனாவில் நடந்த விங் சூட் சாம்பியன்ஷிப் போட்டியில் வீரர்கள் சாகசம் செய்து அசத்தினர்.
ஹுனான் மாகாணத்தின் ஜாங்ஜியாஜி நகரில் உள்ள தியான்மென் மலையில் 12-வது உலக விங்சூட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. ஹாலிவுட் திரைப்படமான ‘அவதார்’ படத்தில் இடம்பெற்ற இயற்கைக் காட்சிகளுக்கு உத்வேகமாக அமைந்த பகுதி என்ற பெருமையைக் கொண்ட தியான்மென் மலையில், 11 நாடுகளைச் சேர்ந்த 16 முன்னணி விங்சூட் வீரர்கள் பங்கேற்றனர்.

