61 அடி உயர முருகன் சிலைக்கு கனகனந்தலில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல் கிராமத்தில் 61 அடி உயர முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
விழா, நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, விநாயகர், மாரியம்மன், ஐயப்பன் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து 61 அடி உயரமுள்ள முருகன் சுவாமி சிலைக்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரம் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து கோவில் மூல கலசங்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
